தீபாவளி பண்டிகையையொட்டி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு லட்சக்கணக்கில் பணத்துடன் தங்கம் மற்றும் வெள்ளி நாணையங்களை பாஜக அமைச்சர்கள் பரிசு பொருட்களாக வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் மாநில சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, சுற்றுலாத்துறை அமைச்சர் அனந்த் சிங் ஆகியோர் ஊராட்சி, பேரூராட்சி, நகர்மன்ற உறுப்பினர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளனர். சுற்றுலாத் துறை அமைச்சர் அனந்த் சிங் தனது விஜயபுரா தொகுதியைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 200க்கும் மேற்பட்டருக்கு ஒரு லட்ச ரூபாய், 144 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, உயர் ரக உலற்பழங்கள், இனிப்புகள், பட்டுப்புடவை மற்றும் வேட்டி ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து விநியோகித்துள்ளார்.
இதேபோல் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோரும் தங்கள் தொகுதிகளில் ஆயிரக்கணக்கானோருக்கு விநியோகித்துள்ளனர். இந்தப் பரிசு பொருட்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜகவின் இந்தச் செயலுக்கு மத சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.