Skip to main content

பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்ணைத் திருமணம் செய்த இளைஞர்!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

gfn


இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்த வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் கடும் சிரம்மத்தைச் சந்தித்து வருகிறார்கள். பலர் உணவுக்காகப் பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்று அது திருமணத்தில் முடிந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. உத்தரப் பிரத்சத்தை சேர்ந்தவர் பிரபலத் தொழில் அதிபர் லலித் பிரசாத். இவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். அவரிடம் ஒட்டுநராக வேலை பார்ப்பவர் அணில். இந்த ஊரடங்கு நேரத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு வழங்கலாம் என்று முடிவு செய்த லலித் பிரசாத் உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து, தனது ஓட்டுநர் அணிலை அழைத்துக்கொண்டு சாலை ஓரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்துள்ளார். 
 


அப்போது அங்குப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண் அணிலிடம் வந்து தன்னுடைய தாய்க்கு ஒரு பொட்டலம் உணவு கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அந்தப் பெண்ணைப் பார்த்த அணில், எதற்காக இங்கு நின்று பிச்சை எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அவரும் தன்னுடைய குடும்ப நிலைமைகளை அவரிடம் எடுத்து கூறியுள்ளார். இதனால் பரிதாபப்பட்ட அவர், நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் அம்மாவும் இதற்குச் சம்மதம் தெரிவிக்கவே நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் உ.பி-யில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்