சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் வருமான வரி குறித்த தகவல்களில் செய்யப்படும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக 'ஆதார்' எண்ணுடன் 'பான்' எண்ணை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. முதலில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு முடிவடைவதாக இருந்த சூழலில், இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவந்தது.
இறுதியாக 'ஆதார்' எண்ணுடன் 'பான்' எண்ணை இணைக்க மார்ச் 31ஆம் தேதியே இறுதிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் எண்களை இணைப்பதற்கான இணைய பக்கம் முடங்கியது. இதனையடுத்து, பலர் சமுகவலைதளங்களில் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். பின்னர் 'ஆதார்' எண்ணுடன் 'பான்' என்னுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில், 'ஆதார்' மற்றும் 'பான்' எண்களை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதியோடு முடிவதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை பான் என்னுடன் ஆதாரை இணைக்காவிட்டால் 1,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.