Skip to main content

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

 Rangasamy demanded the right to rule!

 

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளையும், பா.ஜ.க 6 தொகுதிகளையும் கைப்பற்றிய நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று மாலை துணைநிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்.

 

அவருடன் பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் ஆட்சி அமைக்க என்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி உரிமை கோரி கடிதம் அளித்துள்ளதாகவும், 10 என்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 6 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்துள்ளதாகவும், எந்தத் தேதியில் அவர்கள் பதவி ஏற்க விரும்புகிறார்களோ அப்போது நேரம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்