Skip to main content

ஹிஜாப் தொடர்பான வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு!

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Judgment in hijab case tomorrow!

 

கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓரி கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் வெடித்தது.

 

இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவர்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தத் தடை விதித்தது. மேலும் விசாரணை முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் ஹிஜாப் அணிய தடைவிதித்ததை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை இடைக்கால உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பிக்க இருக்கிறது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜெ.எம்.காஷி, கிருஷ்ணாதீட்சித்  அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்