Skip to main content

இடதுசாரி மாணவர்கள் ஜேஎன்யு-வில் மாபெரும் பேரணி! 

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
JNU

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகதில் இடதுசாரி மாணவர்களுக்கு ஆதரவாக வாக்கு அளித்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வலதுசாரி அமைப்பை கண்டித்து மாபெரும் பேரணி நடைபெற்றது. 

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது.அந்த தேர்தல் முடிவுகள் இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியானது.முக்கிய பதவிகளில் இடதுசாரி மாணவர்களின் கூட்டமைப்பு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.இந்த நிலையில் வலதுசாரி கூட்டமைப்பின் மாணவ இயக்கமான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் இடதுசாரி கூட்டணிக்கு வாக்களித்த மாணவர்களை கூறி வைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.இந்த தாக்குதலுக்கு காவல்துறையும்,பல்கலை கழக முக்கிய நிர்வாகிகளும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.இந்த தாக்குதல்களை கண்டித்து "ஜவஹர்லால் நேரு பல்கலை கழக ஜனநாயக மாண்புகளை காப்போம்" என்ற கோஷத்துடன் ஆயிர கணக்கான மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஊழியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். போராட்டம் நடந்து வரும்  காரணத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டங்கள்,பேரணிகள் நடத்தவும் பல்கலைகழக  
பதிவாளர் தடை விதிக்கபட்டு இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்