நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக அமெரிக்காவில் ஒருவாரகால சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, டெக்ஸாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த ஹவுடி மோடி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெக்ஸாஸ் மாகாண உறுப்பினர்கள், அமெரிக்க எம்.பி க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழி குறித்து பேசியதோடு, புறநானூறு பாடலையும் மேற்கோள்காட்டி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், மீண்டும் டிரம்ப் அதிபராக வேண்டும் என்று கூறியதாக செய்தி பரவியது. இதற்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மீண்டும் டிரம்ப் அரசு அமையும் என ஹிந்தியில் டிரம்ப் ஏற்கனவே கூறியதையே பிரதமர் மோடி சுட்டிக்காட்டி பேசியதாகவும், பிரதமர் மோடி பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.