ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி முதன்முதல் பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் இனி மக்களுக்கான உதவி தொகை மாதம்தோறும் அவர்களின் வீட்டுக்கே வந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இனி இந்த மாத உதவித்தொகை பயனாளிகளின் வீடுகளை தேடி வரும். அதற்காக யாருக்கும் லஞ்சம் வழங்க இனி தேவை இருக்காது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக கிராமம்தோறும் ஒரு அலுவலகம் திறக்கப்படும். 50 வீடுகளுக்கு ஒரு கிராம தன்னார்வலர் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். மேலும் இது விவசாயிகளுக்கான அரசு. ஆதலால் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் வங்கிக் கடன், டிராக்டர்களுக்கான சாலை வரி ரத்து ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன" என தெரிவித்தார்.