ஊழல் மற்றும் இடைத்தரகர்களற்ற தேசம் மட்டுமே நோக்கம்: பிரதமர் மோடி
இந்தியாவில் ஊழல் மற்றும் இடைத்தரகர்களுக்கு இடமே இல்லை என பிரதமர் அலுவலத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட பதிவுகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையிலான அரசு ஊழலற்ற இந்தியாவை உருவாக்க பல முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது.
ஊழல் மற்றும் இடைத்தரகர்களுக்கு இந்த நாட்டில் இடமே கிடையாது. ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையிலான அரசின் நோக்கம். அரசியல் சிஸ்டத்தில் இருக்கும் ஊழல் கறைகளைக் களைய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என பதிவிடப்பட்டுள்ளது.