நிலவின் தென் துருவத்தை ஆராயும் பணியில் ஈடுபட ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்நிலையில் விண்ணில் செலுத்திய சந்திராயன் 2 விண்கலம் 45 நாட்களில் நிலவில் தென் துருவ பணியை ஆராய தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. ஆராய்ந்த தகவல்களை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சந்திராயன் 2 விண்கலம் உடனுக்குடன் தகவலை அனுப்பும். ஒரு கார் அல்லது இயந்திரத்தை உருவாக்கினால் அதனை சோதனை செய்து பார்ப்பது வழக்கம். ஆனால் விண்வெளியில் செலுத்தப்படும் விண்கலத்தை எவ்வாறு சோதனை செய்யப்படும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. பொதுவாக விண்வெளியில் நிகழும் மாற்றங்களும், பூமியில் நிகழும் வேறுபாடுகள் கொண்டவை. இந்த சோதனையை மேற்கொள்ள இஸ்ரோ, தனது விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைமை அலுவலகமான பெங்களுருவில் நிலவு உள்ளிட்டவை கொண்ட மாதிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சோதனை மேற்கொள்ளும்.
இந்த மையத்தில் தான் ஒவ்வொரு முறையும் விண்வெளியில் விண்கலம் அனுப்பும் போது சோதனை நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தான் சந்திராயன் 2 விண்கலம் சோதிக்கப்பட்டது. இந்த விண்கலம் தரையில் இறங்கி சோதனை செய்ய உள்ளது என்பதால் நிலவில் இருக்கும் மண் மாதிரி இந்தியாவில் இருக்கிறதா? என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சேலம் மற்றும் நாமக்கல்லில் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதிகளில் உள்ள பாறைகளில் மண் மாதிரி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், பேராசியர்கள் உதவியுடன் இஸ்ரோ பாறைகளை மணல்களாக மாற்றி பெங்களூருவில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மண்ணை வைத்து சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஆராய்ச்சியில் இஸ்ரோ நிறுவனம் ஈடுப்பட்டது. சோதனையின் வெற்றியை தொடர்ந்து நாளை அதிகாலை 02.51 மணியளவில் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 விண்கலம்.
இந்த சோதனைக்காக மட்டும் சுமார் 40 வரை மணலை தமிழகத்தில் இருந்து இஸ்ரோ நிறுவனத்திற்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் மணல் முழுவதும் இலவசமாக தமிழகம் இலவசமாக வழங்கியதாகவும், இதனால் இஸ்ரோவிற்கு செலவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் முன்னணியில் உள்ள நாடுகளான அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும் பட்சத்தில், விண்வெளி துறையில் இந்தியா முன்னணி வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வர்த்தக ரீதியிலான அமெரிக்காவின் ஒரு செயற்கைக்கோளும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தவுள்ளது இஸ்ரோ.