Published on 14/08/2019 | Edited on 14/08/2019
சிக்கிம் மாநிலத்தின் எதிர்கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.
சட்டசபையில் 32 இடங்களை கொண்டுள்ள சிக்கிம் மாநிலத்தில் 'சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா' கட்சி ஆட்சி செய்து வருகிறது. 15 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிக்கிம் ஜனநாயக கட்சி, சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் 10 எம்எல்ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். நேற்று டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம் முதன்முறையாக சிக்கிம் சட்டமன்றத்தில் பா.ஜ.க பிரதான எதிர்க் கட்சியாக உருவெடுக்க உள்ளது.