Skip to main content

ஐடி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த இன்ஃபோசிஸ் நிறுவனம்!

Published on 18/05/2019 | Edited on 18/05/2019


இந்தியாவில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்ஃபோசிஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திறன் சார்ந்த ஊக்கத்தொகை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக உள்ள சலில் பரேக் ரூபாய் 10 மதிப்பிலான பங்குகளை ஊக்கத்தொகையாக பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீன் ராவ் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஊக்கத்தொகையாக பெற்றுக் கொண்டார். மேலும் 2018-2019 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.

 

 

infosys

 

 

ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை பங்குகளாக வழங்கும் போது நிறுவனத்தின் மீதான அவர்களின் கவனம் அதிகரிக்கிறது. தங்களது பங்குகள் நன்கு வளர்ந்து சிறந்த லாபத்தை பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஊழியர்கள் செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 5 கோடி பங்குகளை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எத்தனை ஊழியர்கள் ஊக்கத்தொகை பயன்பெறுவார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. கடந்த காலங்களில் இன்ஃபோசிஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி இந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த விஷால் சிக்கா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்தனர். ஆனால் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் சிறப்பாக இயங்கி  லாபத்தை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்