அரசு பொறுப்பில் இருப்பவர்கள் அரசு அலுவலங்களில் ஆய்வு மேற்கொள்ளுவது தற்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது. அப்படி ஆய்வு மேற்கொள்ளும் போது அதிகாரிகள் புடைசூழ உயர்பதவியில் இருப்பவர்கள் ஆய்வு செய்வார்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர் ஒருவர் எந்த ஒரு துணையும் இன்றி, மிதிவண்டியில் சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிசாம்பாத் மாவட்டத்தின் ஆட்சியர், அரசு மருத்துவமனைக்கு தனியாக சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடம் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இதற்காக அவர் மிதிவண்டி மூலம் சாதாரண நபர் போன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். எனினும் மக்களிடம் எளிமையான முறையில் சென்று, அவர்களின் குறைகளை கேட்ட ஆட்சியருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.