Skip to main content

“மழையின் தீவிரம் அதிகரிக்கும்”- இந்திய வானிலை மையம்

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

கடலோர மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதுமாக பரவலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையிலிருந்தே சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

india metrological department

 

 

இந்நிலையில் இந்திய வானிலை மையம், மேலடுக்குச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியக உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் அரபிக் கடலை நோக்கி நகரும் என்று அறிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்