கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் 2.97 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவில் மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்பொழுது மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
உலக அளவில் அமெரிக்காவில் 20.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் பிரேசிலில் 7.75 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 39,803 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் 5.02 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,532 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 2.91 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.