கரோனா, வைரஸ் மனித சமூகத்திற்கும் நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் உலகநாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் உள்ளது. ஊரடங்கு அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய போதிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மத்திய, மாநில அரசுகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,358 லிருந்து 19,452 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 2,109 லிருந்து 2,114 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளநிலையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருவதும், மே 12- ஆம் தேதி முதல் சிறப்புப் பயணிகள் ரயில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.