சீனாவிலிருந்து பறந்து வந்து இந்தியாவில் முதல் முதலாக கேரளா மாநிலத்தில் கால் பதித்து அப்படியே நாடு முழுக்க நடை போட்டுவிட்ட கரோனா வைரஸ், இந்தியாவை கெட்டியாக பிடித்துக் கொண்டது. முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு பிறப்பித்து தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. தற்போது மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்காரணமாக கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,993லிருந்து 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884லிருந்து 9,195 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330லிருந்து 1,62,379 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,929 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும், 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 311 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.