Published on 16/12/2019 | Edited on 16/12/2019

இந்திய ராணுவத்தின் 28- ஆவது புதிய தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில். புதிய தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது. தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் முகுந்த் தற்போது லெப்டினன்ட் ஜெனரலாக உள்ளார்.