எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள
ரிசார்ட்டில் வருமான வரி சோதனை..!
குஜராத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி விலகியதால், மற்றவர்கள் அணி மாறாமல் இருக்க, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் பெங்களூரு அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு அணி மாறி ஓட்டளிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ரூ.12 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.