கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மே-31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று (26/05/2020) காலை நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,845- லிருந்து 1,45,380 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,021- லிருந்து 4,167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 57,721- லிருந்து 60,491 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 80,722 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் குணமடைபவர்கள் விகிதம் 41.60 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.87 சதவீதமாக உள்ளது. தற்போது அதிகபட்சமாக தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.