Skip to main content

மக்கள் வரவேற்பை ஏற்றுகொள்ளமல் இருக்க நான் பேரரசர் இல்லை; உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும் மக்களை சந்திப்பேன் -மோடி

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

 

modi

 

 

 

மக்கள் தெருக்களில் நின்று என்னை வரவேற்கும்பொழுது காரின் இருக்கையிலிருந்து எழாமல் அமர்ந்திருக்க இருக்க நான் ஒன்றும் பேரரசர் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த எட்டாம் தேதி தேசிய பாதுகாப்பு அமைப்பகம் மாவோயிஸ்ட் போன்ற அமைப்புகளால் பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என தெரிவித்திருந்தது. பிரதமர் மோடியின் சாலை வழி பிரச்சாரங்களை பயன்படுத்தி ராஜீவ் காந்தி கொலை போன்ற திட்டத்தை மாவோயிஸ்ட் அமைப்புகள் நடத்த திட்டமிட்டு வருகின்றன எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. தற்பொழுது மோடி மீதான அச்சுறுத்தல் இன்னும் அதிகரித்து வருகிறது எனவும் 2019 -ஆம் ஆண்டு பொதுதேர்தலுக்கு முன்னே குறிவைக்கப்படும் நபர்களில் பிரதமர் மோடி உள்ளார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

 

 

 

ரொட்ஷோ எனப்படும் சாலையோரம் கூடியுள்ள மக்களை எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரெனெ சந்திப்பது போன்றவைகளை பிரதமர் தவிர்க்க வேண்டும் என அவரது சிறப்பு பதுகாப்பு பிரிவினரால் ஏற்கனவே மோடி அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பல பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்திருந்தது மத்திய உள்துறை அமைச்சகம் .

 

இந்நிலையில் சுயராஜ்யா என்ற இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில், தன்னை வரவேற்க ஆயிரம் மக்கள் நிற்கும்பொழுது என்னால் காரின் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாது என கூறியுள்ளார். மேலும் மக்களிடம் பேசும் பொழுதுதான் தனக்கு வலிமை கிடைப்பதாகவும், மக்களின் வரவேற்பை பொருட்படுத்தாமல் இருக்க நான் ஒன்றும் பேரரசர் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்