Skip to main content

பாகிஸ்தானுக்கு ஆதரவு கருத்து, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு வலுக்கும் எதிர்ப்பு...

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

fghgfgfh

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. உலக நாடுகள் இந்தியாவிற்கான தங்களது ஆதரவையும், பாகிஸ்தான் மீதான எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தை நேற்று வெளியிட்டார். ஒரு சில தீவிரவாதிகளின் செயலுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், நாட்டையும் குறை சொல்வது தவறு என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதனை வெளிக்காட்டும் விதமாக #boycottsidhu என்ற ஹாஷ்டேக் இந்தியா அளவில் நேற்று இரவிலிருந்து ட்ரெண்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற போது சித்து விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தான் சென்றது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்