ஐஐடி நுழைவுத்தேர்வில் 100% மதிப்பெண்கள்: லிம்கா சாதனை புத்தகத்தில் இந்திய மாணவர்!
இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கான நுழைவுத்தேர்வில் 100% மதிப்பெண்கள் எடுத்த மாணவரின் சாதனை, உலகப் புகழ்பெற்ற லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
உதய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் கல்பித் வீர்வாள். இவர் ஐஐடி-ல் சேர்ந்து படிப்பதற்கான நுழைவுத்தேர்வான ஜே.இ.இ-ல் 360-க்கு 360 எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான கல்வித்துறை சாதனைகள் பிரிவில் இடம்பெறும். கல்பிட் தற்போது மும்பை ஐஐடி-யில் கணினி அறிவியல் துறையில் பொறியியல் படித்து வருகிறார்.
இதுகுறித்து கல்பித், ‘கண்டிப்பாக நுழைவுத்தேர்வில் தேர்வாகி விடுவேன் என்று தெரியும். ஆனால், 100% மதிப்பெண்களை எடுப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், இந்த சாதனை லிம்கா புத்தகத்தின் சாதனைப்பட்டியலில் இடம்பெறும் என கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்