Published on 23/03/2020 | Edited on 23/03/2020
கரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பரிந்துரைத்துள்ளது தேசிய பணிக்குழு.
உலகம் முழுவதும் 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.3 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இந்நிலையில் கரோனாவைத் தடுக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர் இயக்குநர், “கரோனா பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிந்துரைக்கப்படுகிறது. நோய்த்தடுப்புக்காகவே இது பரிந்துரைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.