ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
பெங்களூரு மாநிலத்தில் பணியாற்றும் இரண்டு ஐஏஎஸ் மற்றும் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐஏஎஸ் அதிகாரிகள் மஞ்ச (மண்டியா மாவட்ட கலெக்டர்) மற்றும் ஜியாவுல்லா (பெலகாவி மாவட்ட கலெக்டர்), சமீபத்தில் பணிமூப்பு அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்ட எம். புட்டமாதையா (பிரின்சிபல், போலீஸ் பயிற்சி கல்லூரி, சென்னபட்டணா), வம்சி கிருஷ்ணா (கூடுதல் போலீஸ் கமிஷனர், தாவணகெரே மாநகரம்) மற்றும் அனுமந்தராயா (துணை போலீஸ் கமிஷனர், மங்களூரு மாநகர போலீஸ்) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.