Published on 31/03/2018 | Edited on 31/03/2018

உத்திர பிரதேச மாநிலத்தில் அமரா மாவட்டத்தில் உள்ள டபார்சி கிராமத்தில் ஒரு வாரத்தில் மட்டும் நூறு குரங்குகள் இறந்துள்ளன. இதனால் அங்குள்ள கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த குரங்குகள் விஷத்தினால் இறந்திருக்ககூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. கிராம மக்கள் "குமோ மேன் சட்னி" என்ற விஷத்தினால்தான் குரங்குகள் இறந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இந்த குரங்குகள் இறந்ததற்கான சரியான காரணங்கள் தெரியாததால் குரங்குகளின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரும் குரங்குகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.