இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதே போன்று தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு குறைந்து வருகின்றது.
இந்நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் மராட்டியத்தில் கரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றது. இதனால் கர்நாடக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து வருபவருக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கரோனா சான்றிதழ் இல்லாதவர்கள் இந்த மாநிலத்தில் இருந்து வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.