ஸ்பெக்ட்ரம் இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று பிரமாண்டமாக பேசப்பட்ட காலத்தில்கூட பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சிறப்பாகவே செயல்பட்டது. ஆனால், வல்லரசாக்குவேன், டிஜிடல் இந்தியா, மேக் இன் இந்தியா என்று மேடைகளில் முழங்கிய மோடியின் ஆட்சியில் 1 லட்சத்து 76 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியமே வழங்கப்படவில்லை.

இந்தியா முழுவதும் குக்கிராமங்களையும் தொலைபேசியால் இணைத்தவர்கள் பிஎஸ்என்எல் ஊழியர்கள். இந்த நிறுவனம் வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாள் அல்லது அடுத்த வேலைநாளில் சம்பளம் வழங்கப்பட்டுவிடும். ஆனால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்துக்காக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி உரிமம்கூட கொடுக்காமல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வருவாய் இழப்பைச் சந்தித்தது. எனவே, பிப்ரவரி மாத சம்பளம் கொடுக்கப்படவில்லை. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபிறகு 10 நாட்கள் தாமதமாக சம்பளம் போடப்பட்டது.
ஜியோ நிறுவனத்துக்கு 5ஜி அலைவரிசை உரிமத்தையே தூக்கிக்கொடுக்கும் மத்திய அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இன்னும் 4ஜி அலைவரிசை உரிமத்தை கொடுக்க மறுக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்களையே ஜியோ நிறுவனம் தனது ஏஜெண்டுகளாக மாற்றி வருகிறது என்றெல்லாம் ஊழியர்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகிறார்கள்.
பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்க முடியாத மோடி எப்படி நாட்டின் காவல்காரனாக இருக்க முடியும் என்றும் அவர்கள் வினா எழுப்புகிறார்கள்.