Skip to main content

இப்படி சென்றால் ஹெல்மெட் இல்லாமல் போனாலும் ஃபைன் இல்லை..!

Published on 05/09/2019 | Edited on 06/09/2019


புதிய மோட்டார் வாகன சட்டப்படி ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நயின் என்பவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஹெல்மெட் அணியாத பலர் அபராதத் தொதையை கட்டுவதில் இருந்து தப்பித்து கொள்வதற்காக வண்டியை ஓட்டி செல்லாமல், தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். அந்த வீடியோவில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் குற்றம். ஆனால் நடந்து செல்வது அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


அதில் பதிவிட்டுள்ள பங்கஜ் நயின், "தண்டத்தொகையை தவிர்ப்பதற்கான நல்ல நடைமுறைதான். தயவு செய்து சாலை விதிகளை மதித்து இதுபோன்ற இக்கட்டான சூழலை தவிருங்கள்' என்று அறிவுரை கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. இது நல்ல ஐடியாவாக தெரிந்தாலும் வண்டியை எல்லா இடத்திலும் தள்ளிக்கொண்டே செல்ல முடியாதே என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்