Skip to main content

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 1,015 ஆக உயர்வு!

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Home use cylinder price hiked to Rs 1,015!

 

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. 

 

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 50 அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1,015- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 22- ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு, ரூபாய் 965- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது தற்போது மேலும் ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து அதே நிலையில் கடந்த மூன்று வாரங்களாக நீடிக்கிறது. தற்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளதால் நடுத்தர மக்களின் மாதாந்திர செலவு மேலும் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்