ஃபேஸ்புக், ட்ரூகாலர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை உடனே தங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் இருந்து நீக்குமாறு மத்திய அரசு ராணுவ வீரர்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்திய, சீன எல்லைப்பிரச்சனையை தொடர்ந்து சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்நிலையில், இந்திய ராணுவம் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை தங்கள் ஸ்மார்ட் ஃபோனிலிருந்து 89 செயலிகள் பயன்பாடுகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தகவல் கசிவு மற்றும் தனிமனித தகவல் பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால் ராணுவவீரர்கள் இந்தச் செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் இட், செண்டெர், யூசி பிரவுசர், யுசி பிரவுசர் மினி, சூம், கேம் ஸ்கேனர், பியூட்டி ப்ளஸ், பப்ஜி, கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவவீரர்கள் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.