கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் புதுச்சேரி மாநில பகுதியான மாஹேவிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாஹே பகுதி மக்களின் பாதிப்புகளை தெரிந்து கொள்வதற்காக கிரண்பேடி நேற்று இரவு மாகேவுக்கு சென்றார். இன்று காலை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மிதி வண்டியில் சென்ற கிரண்பேடி பாதிப்புக்குள்ளான மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அவருடன் மாஹே பகுதி அதிகாரிகளும் உடன் சென்றனர். பாதிக்கப்பட்ட பகுதி பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சியளித்தார். பின்னர் பாதிப்பின் தன்மை குறித்தும், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை புதுச்சேரி அரசு சார்பில் செய்யப்படும் என கிரண்பேடி மக்களிடம் கூறினார்.