நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 1,33,026 கோடியாக அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 1,33,026 கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18% அதிகம் ஆகும். அதேநேரம், கடந்த ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலான ரூபாய் 1,40,986 கோடியுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூலில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவை அடுத்து, தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% அதிகரித்து 7,393 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் காரணமாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடு போன்றவற்றை அமல்படுத்தியதே ஜிஎஸ்டி வசூல் குறைந்ததற்கு காரணம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.