Published on 19/12/2018 | Edited on 19/12/2018
இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான வான்படைக்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஜிசாட் 7ஏ தொலைத்தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இது கடந்த 6 வாரங்களில் ஏவப்படும் மூன்றாவது ராக்கெட். இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை ராக்கெட்டுகளை இஸ்ரோ ஏவுவது இதுவே முதல்முறை. மேலும் இந்த ஜிசாட் 7ஏ செயற்கைகோளானது இந்திய போர்விமானங்களை தரையில் உள்ள கட்டுப்பட்டு மையங்களோடு அதிவேக இன்டர்நெட் சேவை கொண்டு இணைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதன்மூலம் விமானங்களுடனான தகவல் தொடர்பு மேம்படும். மேலும் இந்தியாவின் ஆளில்லா போர்விமானங்களை இயக்கவும் இது பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ பயன்பாட்டிற்காக மட்டும் இந்தியா அனுப்பும் 14 வது செயற்கைகோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.