Skip to main content

லேட்டாக திருமணத்துக்கு வந்த மணமகன்... மணமகள் எடுத்த தடாலடி முடிவு!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019


உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்னால், இளம் ஜோடிக்கு நடந்த திருமணத்தில் சடங்குகள் சரியாக நடத்தப்படாத குறையை தீர்க்க, நேற்று முன் தினம் மீண்டும் முறைப்படி திருமணம் நடத்த வேண்டுமென முடிவெடுத்தனர். முதலில் நடந்த திருமணத்தின்போது வரதட்சணை கேட்காத மணமகன் தரப்பு, இம்முறை பைக் மற்றும் பணத்தை கேட்டதால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் எழுந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தை சார்ந்தவர்கள், மணமகன் வீட்டாரை ஒரு அறையில் வைத்து அடைத்துவைத்து பின்பு வெளிவிட்டனர்.



இதன் காரணமாக திருமணத்துக்கு சரியான நேரத்துக்கு மாப்பிள்ளை வரவில்லை. மதியம் 2 மணிக்கு வரவேண்டிய மாப்பிள்ளையோ, நள்ளிரவில்தான் வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த மணமகள் வீட்டாரோ, உள்ளூரில் ஒருவரை மணமகளுக்கு திருமணம் செய்துவைத்தனர். இதனால் பழைய மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டாருக்கும் மாறி மாறி ஏற்பட்ட தகராறினால், இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்