Skip to main content

சிவசேனா ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

Published on 10/11/2019 | Edited on 11/11/2019

மஹாராஷ்டிராவில் அமைச்சரவை அமைப்பதில் காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னும் இழுபறியே நீடித்து வரும் நிலையில் 9 ஆம் தேதியுடன் பாஜக ஆட்சியின் காலம் முடிந்தது. இந்த சூழ்நிலையில் நேற்றுமுன்தினம்  மகாராஷ்டிரா முதல்வர்  பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

 

Governor calls for Shiv Sena to rule

 

இதனையடுத்து நேற்று மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரி அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தாலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் பாஜக இருப்பதால் மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை என மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரியை சந்தித்த பிறகு, சிவ சேனாவுடன் இணைந்து பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ், என்சிபியுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க விருப்பமா என ஆளுநர் மாளிகை கேட்டுள்ளது. 56இடங்களை பெற்ற இரண்டாவது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் மாளிகை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல் பாஜக உடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவித்தால் ஆதரவு பற்றி முடிவு எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் பேட்டியளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்