Skip to main content

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை: லாபத்திற்கு வரிவிதிக்க அரசுக்கு முழு உரிமையுள்ளது - நிர்மலா சீதாராமன்

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

elon musk

 

இந்திய நாடளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைப்பெற்றது.

 

இந்தநிலையில் இன்று மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

மேலும் கிரிப்டோ சொத்துகளுக்கு வரி விதிக்கப்படுவதால் அது சட்டப்பூர்வமாகாது என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சியை தடை செய்வது அல்லது தடை செய்யாமல் இருப்பது என எந்த நடவடிக்கையாக இருந்தாலும், ஆலோசனைக்கு பிறகே மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்