இன்றைய உலகில் கூகுள் இணையத் தேடுதல் தளத்தைப் பயன்படுத்தாத இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் யாருமே இருக்க முடியாது. எந்தத் தகவலைப் பெற வேண்டுமென்றாலும் நாம் முதலில் தேடுவது கூகுளைத்தான்.
இப்போது கூகுள் நிறுவனம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு இந்திய மொழி பயன்பாட்டாளர்களுக்கு, சர்ப்ரைஸாக புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.
இப்போது, கூகுளில் நாம் ஆங்கிலத்தில் தேடினால் அதே மொழியில்தான் பதில்களும் வரும். ஆனால், அடுத்த மாதத்தில் இருந்து, ஆங்கிலத்தில் தேடினாலும் தமிழ், தெலுங்கு, வங்காளம், மராத்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பதில் வரும். அதேபோல் தங்கிலீசில் தேடினாலும், ஆங்கிலம் மற்றும் தமிழில் பதில் வரும். இந்த வசதி மராத்தி, வங்காளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கும் பொருந்தும்.
மேலும், கூகுள் மேப், ஒன்பது இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும் எனக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.