பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 12 வங்கிகளாக மாற்றப்படும் என அறிவித்தார். மேலும் எந்தெந்த வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன என்பதையும் அறிவித்தார்.
இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பிராட்வேயில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா முன் இன்று போராட்டமும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.