Skip to main content

கௌரி லங்கேஷ் கொலை: மாற்றி மாற்றி பேசும் பாஜக எம்.எல்.ஏ!

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
கௌரி லங்கேஷ் கொலை: மாற்றி மாற்றி பேசும் பாஜக எம்.எல்.ஏ!

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ டி.என்.ஜீவராஜ் வெளியிட்டுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ ஜீவராஜ் கோப்பா பகுதியில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, இதுவரை 11 பாஜக தலைவர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகள் குறித்து சித்தராமைய்யா மீது கௌரி லங்கேஷ் கண்டனம் தெரிவித்ததே இல்லை. அவ்வாறு கண்டனம் தெரிவித்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பாரா? ‘ஆர்ஆர்எஸ்-காரர்களின் படுகொலை’ என அவர் சொல்லியிருந்தால் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்’ என பேசியுள்ளார்.

இந்த கருத்து குறித்து பேசிய கௌரி லங்கேஷின் சகோதரி, ‘அவர் என்ன சொன்னார் என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், அதுமாதிரியான தகவல்களைத் தெரிவிப்பவர் யாராக இருந்தாலும், ஒரு கோழையாகவே இருப்பார்’ என தெரிவித்துள்ளார்.

ஜீவராஜின் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த ஜீவராஜ், ‘கௌரி லங்கேஷ் அந்தக் கொலைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தால், சித்தராமைய்யா குற்றவாளிகளை சிறையில் அடைத்திருப்பார். கௌரியைக் கொல்ல யாருக்கும் துணிச்சல் இருந்திருக்காது என்றே நான் தெரிவித்தேன். மேலும், நான் அரசின் இயலாமையை விளக்கவே முயற்சி செய்தேன். கௌரி லங்கேஷுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்’ என தன் கருத்தை மாற்றி தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்