தெலுங்கானாவில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் தீவிபத்து
தெலுங்கானா மாநிலத்தின் செர்லாபள்ளி பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு எரிவாயு சிலிண்டர் கிடங்கு செயல்பட்டு வருகிறது.
நேற்றிரவு திடீரென அந்த கிடங்கில் சேமித்துவைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் தூக்கி வீசப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் அக்கம்பக்கத்திலுள்ள குடியிருப்புக்குள் விழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பதரியடித்துகொண்டு ஓடினர். இதனால் அப்பகுதி கலவரம் நடந்த இடம்போல் காட்சியளித்தது.
தகவல் அறிந்ததும் 6 வாகனங்களில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.