உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைக்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த 200 ரூபாயாக இருந்த மானியத் தொகை 300 ரூபாயாக உயர்ந்துள்ளது.
முன்னதாக கடந்த 1 ஆம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 203 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 157 ரூபாய் குறைந்த நிலையில், இந்த மாதம் 203 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் ரூபாய் 1,695 ரூபாய்க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது 1,898 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.