Skip to main content

ககன்யான் திட்டத்தில் கரோனா ஏற்படுத்திய பின்னடைவு!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

isro sivan

 

இஸ்ரோ  விஞ்ஞானிகள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

 

ககன்யான் திட்டமானது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இத்திட்டத்தை வருகிற 2022-ஆம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 25 விண்வெளி வீரர்களில் இருந்து 4 வீரர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தற்போது, ரஷ்யாவில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் ஏற்படுத்திய முடக்கம் காரணமாக இத்திட்டம் தாமதமாகலாம் என இஸ்ரோ விஞ்ஞானி சிவன் கூறியுள்ளார்.

 

"இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணியாற்றிய 70-க்கும் மேலான விஞ்ஞானிகளுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே திட்டமிட்ட தேதியில் இருந்து சற்று தாமதமாகலாம்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்