Skip to main content

சட்டப்பேரவை தேர்தல்: வாய்ப்பு மறுக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

sonia rahul

 

தமிழகம் உள்ளிட நான்கு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

 

மேற்கு வங்க தேர்தலில் பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. அப்பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

ஆனால் இப்பட்டியலில் காங்கிரஸ் தலைமையின் மேல் அதிருப்தியில் இருக்கும், தலைமையின் முடிவுகளை விமர்சித்து வரும் ஜி - 23 தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் பிரச்சாரம் செய்ய விருப்பம் தெரிவித்தும் வாய்ப்பளிக்கப்படாதது, காங்கிரஸ் தலைமைக்கும் ஜி-23 தலைவர்களுக்கும் இடையேயான பிளவை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்