Skip to main content

சத்தீஸ்கரில் உள்ள "ரபேல்" (Rafale) கிராமம் !

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

சத்தீஸ்கர் மாநிலத்தில் "ரபேல்" (Rafale) பெயரில் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமம்  "மஹாசமுந்த் "மக்களவை தொகுதிக்கு உட்பட்டது . 2019 - ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து எதிர்கட்சிகளின் பரப்புரை என்பது "ரபேல்" தலைப்பு மட்டுமே. ஏனெனில் முந்தைய காங்கிரஸ் அரசு அரசு " ரபேல் போர் விமானத்தை" பிரான்ஸ் அரசிடம் வாங்க ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்ததை ரத்து செய்த பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு குறைந்த எண்ணிக்கையில் விமானங்களை வாங்கவும் , அதிக விலைகளை உள்ளிட்டக்கிய ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கையெழுத்திட்டனர். 

 

raffael



இந்நிலையில் இந்தியா சார்பில் ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானிக்கு சில ஒப்பந்தங்களை இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்று தந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 2014-2019 ஆண்டு வரை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதற்கு காரணம் "ரபேல்" விமான கொள்முதலில் பாஜக ஊழல் செய்ததாகவும் , ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானி அவர்களுக்கு முறைகேடாக ஒப்பந்தம் தந்துள்ளது என கூறி தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் விமான உற்பத்தியில் முன்னணியில் உள்ள பெங்களூர் " Hindustan Aeronautics Limited" நிறுவனத்ததிற்கு "ரபேல்" போர் விமான ஒப்பந்தம் தராமல் ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பாஜக அரசு தந்தது என எதிர்கட்சிகள் இந்தியா முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் " ரபேல்" விமான பெயரில் இந்தியாவில் ஒரு கிராமம் உள்ளது என்பதை கண்டு மக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்