டெல்லியில், சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை வழங்கவேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
டெல்லி உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆணையில், டெல்லியில் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மானிய நிலத்தை பெற்று கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் கண்டிப்பாக ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டும். அரசின் மலிவு விலை நிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகள் பிரிவில் 25 சதவீதம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஒதுக்க வேண்டும். அதேபோல் உட்புற நோயாளிகள் பிரிவில் 10 சதவீதம் ஏழைகளுக்கான இலவச சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த ஆணையை மீற நேரிட்டால் மீறும் தனியார் மருத்துவமனையின் குத்தகை ரத்து செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.