Skip to main content

நிலவில் உலா வரும் ரோவர் - இஸ்ரோ பெருமிதம்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

 Ch-3 Rover ramped down from Lander and  India took walk on the moon

 

நிலாவின் தென் துருவத்தில் இறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் பிரிந்து தனது பயணத்தைத் தொடங்கியதாக இஸ்ரோ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது.

 

இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் இந்தியா தனது ஆய்வைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ பெருமிதம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கிய நிலையில், லேண்டரில் இருக்கும் ரோவர் எப்போது வெளியே வந்து அதன் ஆய்வினைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் உலக நாடுகளில் உள்ள பல விண்வெளி ஆய்வு மையங்கள் உற்றுநோக்கிக்கொண்டு இருந்தன. இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியிலிருந்து லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை நிலவின் தென் துருவத்தில் தொடங்கியுள்ளது. இதனை, ‘நிலவின் மேற்பரப்பில் ஆய்வைத் தொடங்கியது இந்தியா’ என இஸ்ரோ பெருமிதத்துடன் ட்வீட் செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்