மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்) 50வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் முகாமிட்டுத் தங்கியிருந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் சி.ஆர்.பி.எப் கான்ஸ்டபிள் ரீதேஷ் ரஞ்சன், தனது ஏ.கே-47 துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.
இதில் 4 நான்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய ரீதேஷ் ரஞ்சன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்த துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள வெளிப்படுத்தியுள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.