Skip to main content

புதுவையில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! - கல்வித்துறை உத்தரவு!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

Postponement of Plus 2 general examination in Puducherry ...

 

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கெல் பெனோ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில்,

 

''தமிழக தேர்வுத்துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, மே 5 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும் நடைபெறுவதாக இருந்த தமிழகக் கல்வி வாரியத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

திருத்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாள்கள் குறித்த அறிவிப்பு, தமிழகக் கல்வி வாரிய இயக்குநரால் தேர்வு நடைபெறும் 15 நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும். பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த வடிவம் அல்லது முறையிலும் வகுப்புகளை நடத்தக் கூடாது.

 

பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எந்த நோக்கத்துக்காகவும் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தக் கூடாது. கரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை பரவிவரும் நிலையில், பள்ளிகள் வகுப்புகள், நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகள், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு, டியூசன் உள்ளிட்ட எந்தவிதக் கல்வி நடவடிக்கைகளையும், எந்த வடிவத்தில் அல்லது முறையிலும் நடத்தக் கூடாது. மேற்கண்டவற்றை மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடர்பான விதிமீறல் மற்றும் புகார்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். விதிமீறல்களுக்கு குறிப்பிட்ட பள்ளியே முழுப் பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்