
உத்திர பிரதேசம் சாரான்பூர் பகுதியில் கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லக்னோவில் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு அரங்கில் கபடி வீராங்கனைகளுக்கான உணவு சமைக்கப்பட்டு கழிவறையில் வைக்கப்பட்டது. கபடி வீராங்கனைகள் கழிவறை தரையில் அமர்ந்து அவர்களுக்கு கொடுத்த உணவை உண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வீராங்கனைகள் உண்பதற்காக தயார் செய்யப்பட்ட பூரிகள் கழிவறைகளில் தாள்கள் விரிக்கப்பட்டு அதன் மேல் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அரிசி சரியாக வேக வைக்கப்படாமல் இருந்ததாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “விளையாட்டு வீரர்களை நாம் இப்படி நடத்தினால் அவர்கள் எப்படி ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வார்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.